ஆர்.கே. நகர்: விஷால் போட்டியிட்டால் காமெடியாக இருக்கும்: சீமான் கிண்டல்

சென்னை:

ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிட்டிருந்தால் நகைச்சுவையாக இருந்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ மக்கள் அனைவரும் கன்னியாகுமரி செல்லுங்கள் என்று சொன்னால் எடப்பாடி கான்வாய் ஆர்கே நகர் சென்று கொண்டிருக்கிறது. குமரி மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எதுவுமே செய்யவில்லை. போராடிய 9 ஆயிரம் மக்கள் மீது வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம்.

மண்ணையும், மக்களையும் நேசிக்ககூடியவர்கள் களத்தில் நிற்கவேண்டும். பணம் பதவி ஒன்றே நோக்கத்துடன் செயல்படும் அதிமுக.வால் எந்த வகையிலும் நன்மை இல்லை. தமிழக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். விஷாலை தேர்தலில் போட்டியிட்ட அனுமதித்து இருந்தால் இன்னும் நகைச் சுவையாக இருந்திருக்கும்’’ என்றார்