சென்னை:

டிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சென்னை, ஆர்.கே.நகர் பகுதியில் ‘பொதுமக்கள்’ போராட்டம் நடத்தினர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவர் வாக்காளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வரை அளித்து வாக்குகளைப் பெற்றதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், “திருடனிடம் பிச்சை எடுத்திருக்கிறார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்” என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், “ஆர்.கே.நகர் மக்களை கமல்ஹாசன் அவமதித்துவிட்டார்” என்றும் கூறினார்.

இதற்கிடையே சென்னை பூந்தமல்லி பகுதியில் சிலர் கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

இந்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தாங்கள் ஆர்.கே.நகர் பொதுமக்கள் எனவும் தங்களை நடிகர் கமல்ஹாசன் அவமானப்படுத்திவிட்டதாகவும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தினகரனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.