ஆர்கே நகர் நிலைதான் திருப்பரங்குன்றத்திலும்… திமுக, அதிமுவை தெறிக்கவிடும் தினகரன்

மதுரை:

திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வரும் டிடிவி தினகரன், நாட்டின்  சுதந்திரத்துக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவதுபோல மோசமான ஆட்சி நடைபெறவில்லை என்று கூறியவர், ஆர்.கே.நகர் வெற்றிபோல திருப்பரங்குன்றத்திலும் அமமுக அமோக வெற்றி பெறும் என்று சூளுரைத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில்  அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக அங்கு முகாமிட்டு வாக்கு சேகரித்து வரும் டிடிவி தினகரன், அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அங்கு மக்களிடையே பேசியவர், இந்த தொகுதிக்கு எப்போதோ நடந்திருக்க வேண்டும், ஆனால் புயல் அதுஇதுன்னு காரணம் காட்டி  8 மாதத்தை கடத்தி விட்டனர். ஆனால், இதற்கு காரணமாக புயல் அல்ல ஆளுங்கட்சியினரின் டெபாசிட் பறிபோய் விடும் என்ற பயம்தான் என்றார்.

தமிழகத்தில்,சுதந்திரத்துக்குப் பின்னர் இதுபோன்ற மோசமான ஆட்சி  நடை பெற்றதில்லை என்று கூறியவர், கு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் தமிழக மக்களைப் பற்றி எந்த கவலைப் படாமல்  ஆட்சி செய்து வருகிறார்கள் என்று கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் அமமுக அமோக வெற்றி பெறும் என்று கூறியவர்,  ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் இரட்டை இலை சின்னத்தை படுதோல்வி அடையச் செய்தார்கள். தற்போது நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை என்று கூறி புறக்கணித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்தார்கள். அங்கு தி.மு.க.வும், காங்கிரசும் டெபாசிட் இழந்தது.

அதேபோன்ற நிலைதான் திருப்பரங்குன்றத்திலும் ஏற்படும். இங்கு அமமுகவின் பரிசு பெட்டகம் தான் வெற்றிபெறும் என்றவர், பரிசுப்பெட்டி சின்னம்தான்  வெற்றிச்சின்னம் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய  கஜா புயல் பாதிப்புகளை பார்க்க வராத மோடி தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் வருகிறார். அதனால் தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக கோபமடைந்து மோடிக்கு எதிராக திரும்பியுள்ளனர். மோடி அனைத்து மாநிலத்தையும் அடிமை ஆட்சி செய்ய நினைக்கிறார். அவருக்கு எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஒத்து ஊதுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: EdappadiPalaniswami, election campaign, rk nagar, thiruparankundram, ttvdhinakaran
-=-