திரைப்படதொழிலாளர் சங்கம் “பெப்சி” தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வு

சென்னை:

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர்  ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் (Fefsi-Federation of Film Employees Union) பெப்சி அமைப்பின்  நிர்வாகிகளின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியோடு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அமைப்பின் 2019-2021-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்  நேற்று (பிப்ரவரி 17) வடபழனியில்   நடைபெற்றது.

இதில் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தலைவராக ஆர்.கே. செல்வமணியும், செயலாளராக  சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.