கபூர் குடும்பத்தினரின் ஸ்டூடியோவில் கடைசி கணேஷ் சதுர்த்தி

மும்பை

ராஜ்கபூர் குடும்பத்தினருக்கு சொந்தமான ஆர் கே ஸ்டூடியோஸ் மூடப்பட உள்ளதால் அங்கு கடைசியாக விநாயக சதுர்த்தி கொண்டாடபட்டது.

பாலிவுட்டின் பாரம்பரிய குடும்பங்களில் கபூர் குடும்பமும் ஒன்றாகும்.   பிரித்விராஜ் கபூரில் ஆரம்பித்து அவர் மகன்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேத்திகள் வரை திரையுலகில் இன்றும் புகழ்பெற்று விளங்கி வருகின்றனர்.   பிருத்விராஜ் கபூரின் மகனான ராஜ் கபூர் அமைத்த ஆர் கே ஸ்டூடியோஸ் மும்பையில் செம்பூரில் உள்ளது.

ஆர் கே ஸ்டூடியோவில் ஒவ்வொரு வருடமும்  விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.    ராஜ்கபூரின் மகன்களும் பேரன்களும் இன்றும் அதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  இந்த வருடத்துடன் இந்த ஸ்டூடியோவை மூட உள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்றன.   ஆகையால் அநேகமாக இந்த வருட விநாயக சதுர்த்தி இந்த வளாகத்தில் கொண்டாடப்படும் கடைசி விநாயக சதுர்த்தியாக இருக்கலாம் என்பதால் கூட்டம் திரளாக வந்திருந்தது.

இந்த விழாவில் ராஜ்கபூரின் மகன்களான ரந்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜிவ் கபூர் ஆகியோரும் மற்றும் ரிஷி கபூரின் மகனான ரன்பீர் கபூர் உள்ளிட்ட அனைத்து கபூர் குடும்ப பிரபலங்களும் வந்திருந்தனர்.   ரண்பீர் கபூர் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தவர் இந்த விழாவுக்காக இந்தியா வந்திருந்தார்.    பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் நன்கு அமைக்கப்பட்டிருந்ததாக விழாவுக்கு வந்திருந்தோர் தெரிவித்தனர்.

கார்ட்டூன் கேலரி