”வலிமை ஆக்ஷன் வேற லெவல்” என பதிவிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள்.

அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பதிவில் “வணக்கம். எங்கள் ‘வலிமை’ படத்தின் மீதான நீங்கள் காட்டும் அன்பு மகிழ்ச்சியளிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருவதால் பொறுத்துக் கொள்ளுங்கள். இது படத்தின் நலனுக்காகவே” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மார்ச் 25ல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிகிறது. இந்தச்சூழலில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், வலிமை பட ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவை சந்தித்த போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்து, ”வலிமை ஆக்ஷன் வேற லெவல்” என பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.