ஃபைனான்சியரை மணமுடித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்….!

தாரை தப்பட்டை’, ‘மருது’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ்.

தற்போது மது என்கிற ஃபைனான்சியரை சுரேஷ் திருமணம் செய்துள்ளார். ஒரு சில நெருங்கிய சொந்தங்கள் சூழ இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

“எனது மகிழ்ச்சியான தருணம் குறித்து உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. ஆம், எனக்குத் திருமணம் முடிந்துவிட்டது. உங்களது அன்பு, ஆசிர்வாதம், ஆதரவுக்கு நன்றி. என் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ட்விட்டரில் ஆர்.கே சுரேஷ் பகிர்ந்துள்ளார். இதோடு தாலி கட்டும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.