சென்னை:

தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் நலனுக்காக, ரயில்வே அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவியுள்ளார்.

கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து கொரோனாவை ஒழிக்க விளக்கு ஏற்றுவது, கைத்தட்டுவது என பல்வேறு நிகழ்வுகளை அரங்க்கேற்றி வருகின்றனர். இதுமட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி, பொதுமக்கள், தூய்மைபடுத்தும் தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்வது, பரிசுகள் அளித்து கவுரவித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதேபோன்று சென்னையில், ரயில்வே அதிகாரியும் கேரளாவில் உள்ள அவரது மருத்துவர் நண்பரும் வித்தியாசமாக தூய்மை பணியாளர்களுக்கு உதவ முன்வந்தனர்.

இவர்கள் இருவரும் இனைந்து, சென்னை ரயில்வே பிரிவு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 1,172 தூய்மை பணியாளர்களுக்கு, தங்கள் சொந்த செல்வில், காப்பீட்டு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை பிரிவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக (ஏ.டி.ஆர்.எம் -1) பணியாற்றும் பி இளங்கோவன் மற்றும் கொல்லத்தைச் சேர்ந்த அவரது நண்பர் டாக்டர் எஸ் மனோகரன் ஆகியோர் தெரிவிக்கையில், பாலிசி பிரீமியம் எடுக்க ஒரு நபருக்கு வெறும் 160 ரூபாய் செலவாகும் என்றாலும், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் இந்த இன்சூரன்ஸ் மூலம் 25,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறினார்.

தினசரி ஊதியம் வழங்கப்படுவதால் பெறும் ஒப்பந்த தொழிலாளர்கள், ஒருவேளை கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் சம்பளத்தை இழக்க கூடும். இது போன்ற நேரத்தில் இந்த இன்சூரன்ஸ் தொகை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் குறித்து பேசிய இல்லங்கோவன், ஆஸ்திரேலியாவில் ‘ஒரு சுகாதாரப் பணியாளரைத் தத்தெடுங்கள்’ திட்டத்தைப் பற்றி படிக்கும்போது இந்த யோசனையை தனக்கு தோன்றியதாகவும், இதை பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பரும் டாக்டருமான மனோகரன் தானும் உதவ தயாராக இருப்பதாக தெரித்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, இளங்கோவன், ரயில் நிலையங்கள் மற்றும் காலனிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் பட்டியலை சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவத் துறைகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சேகரித்துள்ளார். பின்னர், 10-12 தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்துள்ளார். தொடர்ந்து இவர்கள் இருவரும் இனைந்து 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்சூரன்சை எடுத்து கொடுத்துள்ளனர். இதற்காக இவர்கள் இருவரும் தங்கள் சொந்த பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர்.

இதையடுத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து உதவுபவர்களின் எண்னிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை பிரிவில் தலைமை டிக்கெட் ஆய்வாளரும், தன்னார்வலருமான எஸ்.எம். வாசு help4covidTN, என்ற உதவி குழுவை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தான் உருவாக்கிய குழு மூலம் இதுவரை 26 தொழிலாளர்களுக்கு உதவியுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.