சாலை விபத்து: முன்னாள் திமுக எம்எல்ஏ மனோகரன் உயிரிழப்பு!

சென்னை: சிவகங்கை அருகே  ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த திமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே தேசிய நெடுங்சாலையில் படமாத்தூர் அருகே தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் வேனும் மோதிய விபத்தில் முன்னாள் திமுக சிவகங்கை எம்எல்ஏ மனோகரன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து அறிந்த பூவந்தி போலீசார் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் உள்பட இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மறைவுக்கு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.