கொழும்பு

வெடிகுண்டுகள் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பிடிபட்டதால் இலங்கையில் சாலை சோதனை தீவிரமாகி உள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. எட்டு ஈடங்க்ளில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் 300 க்கும் மேற்பட்டோர் பரிதாப மரண அடைந்தனர். அத்துடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்கொலைப் படை மூலம் நடந்த இந்த தாக்குதல் தவ்ஹீத் ஜமாத் என்னும் இஸ்லாமிய இயக்கம் நடத்தியதாக அரசு கூறியது.

ஆனால் தற்போது மற்றொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐ எஸ் இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டது. மேலும் தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. நேற்று விபத்தில் மரணம் அடைந்தோருக்கு அனுதாப தீர்மானம் இயற்றிய பிறகு நாடெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் லாரிகளிலும் வேன்களிலும் வெடிகுண்டுகள் மறைத்து எடுத்துச் செல்வதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை ஒட்டி சாலை சோதனை நடத்திய போது கொழும்பு நகருக்கு வந்த ஒரு லாரியில் வெடிகுண்டுகளும் அதை இயக்க தேவையான கருவியும் கிடைத்துள்ளது. அதனால் இலங்கை அரசு சாலை சோதனைகளை மேலும் தீவிரமாக்கி உள்ளது.