கேரளா ; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை சீரமைப்பு

லப்புரம், கேரளா

கேரளாவில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளவில்  ஏற்பட்ட  கடும் வெள்ளப் பெருக்கினால் மக்கள் பலர் துயருற்றனர்.    அந்த வீடியோக்கள் அப்போது பலராலும் பகிரப்பட்டன,   ஒரு பாதுகாப்புப் படை வீரர் ஒரு குழந்தையை தூக்கியபடி பாலத்தில் ஓடி வந்த போது அவர் பாலத்தை தாண்டிய அடுத்த நொடியே வெள்ளத்தில் பாலம் மூழ்கியது.   அதைப் போல் கட்டிடத்தின் இடையில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு பெண் வான் வழியில் காப்பாற்றப்பட்டார்

எல்லாவற்றையும் விட பலரையும் சோகத்தில் ஆழ்த்திய வீடியோவில் மலப்புரம் அருகே உள்ள ஒரு சாலை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட காட்சி இடம் பெற்றிருந்தது.    கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி அன்று அந்த சாலை அடித்துச் செல்லப்பட்டது.    இது போல ஒரு நிகழ்வு கேரளாவில் நடந்தது அதுவே முதல் முறையாகும்.

அதை ஒட்டி 30 பேர் கொண்ட ராணுவக் குழுவினர் ஒரு தற்காலிக 40 அடி நீள பாலம் ஒன்றை பனைமரங்களைக் கொண்டு அமைத்தது.   இதன் மூலம் மக்களால் அந்த சாலையில் நடந்து செல்ல முடிந்தது.   ஆனால் வாகனப் போக்குவரத்து அடியோடு நின்று போனது.

தற்போது அந்த சாலை மாநில பொதுப்பணி துறையினரால் முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ளது.   இப்போது அந்தச் சாலை வாகனங்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக அந்த சாலை  உள்ளது.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   இதை ஒட்டி பொதுப்பணித்துறையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இடு குறித்து கேரள முதல்வர் பிணராயி விஜயன், “கேரள் பொதுப்பணித்துறை 4,429 கிமீ தூர சாலையை செப்பனிட்டுள்ளனர்.   மொத்தம் 164 பணிகள் முடிவடைந்துள்ளன.  முடியும் தறுவாயில் சுமார் 429 பணிகள் உள்ளன.  இவை முடிந்தால் மேலும் 3,148 கிமீ தூரமுள்ள சாலை செப்பனிடும் பணி முடிவடையும்.   இவை தவிர புதியதாக 64 சாலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன” என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.