அகமதாபாத்:

குஜராத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ராஜஸ்தானிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளை வரை மழை தொடரும் என் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்கு இந்திய ராணுவமும், விமான படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் முதல்வருடன் பிரதமர் நரேந்திரமோடி தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார். ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பணஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சிபு மற்றும் தண்டிவாடா அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் சிபு அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்ப்டடுள்ளது. குஜராத் வடக்கு பகுதியில் உள்ள ராஜஸ்தான் மாநில எல்லைகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. பணஸ்கந்தா மாவட்டத்தில் தான் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

ராஜஸ்தானில் ஜலோர், பலி, சிரோஹி மாவட்டங்களில் அதிக மழை காரணமாக மீட்டு பணிக்கும், நிவாரண வழங்கும் பணியில் ராணுவமும், விமான படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 மாவட்டங்களுக்கு சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 10 குழுவினர் பணியாற்றி வருகின்றனர். ஜாம்நகர், ஜோத்பூர், பலோடி ஆகிய பகுதிகளில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் குஜராத்தில் பாணஸ்கந்தா மற்றும் தீசா தாலுகா பகுதிகளிலும். ராஜஸ்தான் மாநிலம் ஜலோர், பாலி மாவட்டங்களிலம் இந்திய விமான படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகுன்றனர். குஜராத்தில் 100 உள்ளூர் சாலைகள், 19 மாநில நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் மட்டும் இது வரை மழைக்கு 60 பேர் இறந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.