முதியவர்களிடம் வசியம் செய்து கொள்ளையடித்த கில்லாடி பெண் கைது!

சென்னை,

முதியவர்களிடம் பேசி வசியம் செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் அடிக்கடி தனியா வசித்து வரும் முதியவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பொருட்கள் கொள்யைடித்து செல்வது அதிகரித்து வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுபட்டு வருவது பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆயிஷா என்பது தெரிய வந்தத.. இவர் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து முதியவர்களை வசியம் செய்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு மீண்டும் பெங்களூருவுக்கே சென்று விடுவார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக விருகம்பாக்கத்தில் முதியவர் ஒருவரை வசியம் செய்து அவரிடமிருந்த 3 சவரன் நகைகளை கொள்ளையடித்து இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது வடபழனி ரோந்து போலீசார் ஆயிஷாவை கைது செய்தனர்.

விசாரணையில் ஆயிஷா மீது வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் நகை பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் பெங்களூரு நகரிலும் இவர் மீது வழக்குகள் உள்ளதும், 2 ஆண்டு சிறைதண்டனை அனிபவித்து சமீபத்தில் வெளியில் வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

கார்ட்டூன் கேலரி