ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கும காட்சி

நம்பியூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன் புதூர் கிழக்கு தோட்டத்தை சார்ந்தவர் சுப்பரமணி (52) இவர் விவசாயம் செய்து வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார் .

ஆழ்குழாய் கிணறுக்கு மோட்டார் வாங்க நம்பியூரில் உள்ள வங்கியில் ரூ 2 லட்சத்தை எடுத்துக் கொண்டு நநம்பியூர் கோபி ரோட்டில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளனர். ஒரு லட்சம் பணத்தினை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு மோட்டார் வாங்க கடைக்கு சென்று விட்டார்.

எலட்க்ரிகல் கடையில் பேசிவிட்டு திரும்பி வந்து வண்டியை பார்த்த பொழுது அவர் பெட்டி திறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 1 லட்சத்துடன் உள்ளே இருந்த மஞ்சள் பையை காணவில்லை. அந்த பையில் மேலும் சில ஆவணங்களும் இருந்து உள்ளன.

இது குறித்து நம்பியூர் காவல் நிலையத்தில் சுப்பரமணியம் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சி.சி.டி.வி பதிவை கைப்பற்றி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். கேமரா பதிவுகளில் பணம் திருடிய ஆசாமி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.