பிரேசில்லா:

பிரேசில் விமானநிலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில் இருநது 50 லட்சம் அமெரிக்க டாலரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டில் சாவ் பவுலோ நகரில் உள்ள குவாருல்ஹோஸ் விமானநிலையத்தில் 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் லூஃப்தன்ஸா விமானத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் விராகோபோஸ் விமானநிலைய சரக்கு நிறுத்தத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. சுவிட்சர்லாந்து ஜூரிச் நகரை சேர்ந்த இந்த விமானம் ஜெர்மனியின் ஃப்ரான்க்ஃபுர்ட் விமான நிலையத்தை நோக்கி பயணிக்க இருந்தது.

விராகோபோஸ் விமானநிலையத்தில் இந்த விமானம் நுழைந்தவுடனேயே ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஒன்று சரக்கு முணையத்தின் பக்கவாட்டு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தது. அங்கிருந்த பாதுகாப்பு வீரர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறித்து, அவர்களை ஒரு அரையில் போட்டு பூட்டினர்.

பின்னர் விமானத்திற்குள் நுழைந்து அதில் இருந்த 50 லட்சம் டாலர்களையும் கொள்ளையடித்துக கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அனைவரது கவனத்தையும் திசை திருப்பும் வகையில் விமானநிலைய பாதுகாப்பு முகமை ஒன்றின் வாகனத்தை கொள்ளையர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் யாரும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பான விசாரணை நடத்தப்படுகிறது. கொள்ளை நடந்த இடம் விமானநிலையத்தின் சர்வதேச பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் 6 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

பிரேசிலில் விமான நிலையங்களின் சரக்கு முனையத்தில் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. 2017ம் ஆண்டில் அதிகப்படியாக 10 ஆயிரத்து 584 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. 2001ம் ஆண்டிற்கு பின் அதிக அளவில் 2017ம் ஆண்டில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

2016ம் ஆண்டை விட 6.6 சதவீதம் சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளது. ஆனால், இதற்கு முன்பு டிரக், மினி வேன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது தான் முதன் முறையாக விமானத்தை குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.