திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை!

வேலூர்:

திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் கொள்ளை போனது. இந்த கொள்ளை குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சண்முகம் வயது 55 இவரது மனைவி வளர்மதி வயது 50 வளர்மதி இன்று 11 மணி அளவில் வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின்  உள்ளே சென்று பார்த்தபோது, அங்கருந்த  பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரொக்கப் பணம் மாயமாகி இருந்தது.  மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://youtu.be/ekBgAVqSmMU