Random image

மும்பை: ஹெச்டிஎப்சி வங்கி அதிகாரியை கொன்றது கொள்ளையன்….விசாரணையில் அம்பலம்

மும்பை:

மும்பை ஹெச்டிஎப்சி வங்கி அதிகாரி கொலைக்கு கொள்ளை சம்பவம் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

மும்பை எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவராக இருந்தவர் சித்தார்த் சங்கி. கடந்த 5-ம் தேதி மாயமான இவரை குடும்பத்தினரும், போலீசாரும் தேடி வந்த நிலையில், சிங்வியின் சடலம் மும்பை கல்யான் ஹாஜி மலாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இவரது கொலைக்கு கொள்ளை சம்பவம் தான் காரணம் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். பார்கிங் பகுதியில் சித்தார்த்திடம் கொள்ளையன் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். பணம் தர மறுத்து சத்தம் போட்டதால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் சித்தார்த் உடலை அவரது காரில் வைத்து அவன் தங்கியுள்ள கோபார்க்கயிரனே பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளான்.

இது தொடர்பாக சர்பராஸ் ஷேக் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர் தான் இச்சம்பத்தில் ஈடுபட்டுள்ளார். பேப்ரிக்கேட்டராக பணியாற்றும் ஷேக் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கை என்பது தெரியவந்துள்ளது.