பட்டப்பகலில் ராபர்ட் மாஸ்டர் வீட்டில் சைக்கிள் திருட்டு…..!

--

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டியின் நடிப்பில் வெளியான படம் ‘அழகன்’. இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ராபர்ட்.

அஜித், விஜய்,சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடனம் ஆடும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தனது வீட்டின் முன்புறம் இருக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ள அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் அவரது வீட்டின் கதவை திறந்து சைக்கிளை திருடி செல்வது பதிவாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்துள்ள சம்பவம் குறித்து நடிகர்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.