பிரியங்கா காந்திக்காக பிரார்த்திக்கும் ராபர்ட் வதேரா

டில்லி

பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் வெற்றி பெற அவருடைய கணவர் ராபர்ட் வதேரா பிரார்த்திப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.   அவருக்கு உத்திரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.   தற்போது பிரியங்கா காந்தி முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா பாராட்டு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராபர்ட் வதேரா,

அன்பு பி 

உனது உத்திர பிரதேச மாநில பொறுப்புக்கும் மக்கள் சேவைக்கும் எனது வாழ்த்துக்கள்

எனது நெருங்கிய தோழியான நீ எனது ஆருயிர் மனைவியாகவும் நமது குழந்தைகளுக்கு ஒரு தலை சிறந்த தாயாகவும் இருந்தாய்.   தற்போது பழி வாங்கும் மற்றும் தீய அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.   

எனவே மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது பிரியங்காவின் கடமை என்பதை நான் அறிவேன்.  ஆகையால் நான் அவரது கரங்களை இந்திய மக்களிடம் ஒப்படைக்கிறேன். 

அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள பிரார்த்திக்கிறேன்

என பதிந்துள்ளார்.