கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் சமூகவலைதளங்களின் பக்கம் தங்களது கவனத்தை திசை திருப்பி ஒரு சிலர் ஏதாவது ஒரு புகைப்படமோ வீடியோவோ பதிவேற்றி வருகின்றனர் .

அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது மகளுடன் நடனமாடி டிக் டாக் செய்துள்ளார்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .