சாக்கடையை சுத்தம் செய்ய இனி ரோபோட் தான் வரும்: டெல்லி மாநில அரசு நடவடிக்கை

புதுடெல்லி:

பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ரோபோட்டை முழுமையாகப் பயன்படுத்த டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக டில்லி கேபினட் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஐஐடி டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டி, புதுடெல்லி மாநகராட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கழிவை மனிதனே சுத்தம் செய்யும் முறையை முற்றிலும் நீக்க, அவர்கள் செய்த பணிகளை ரோபோட்டை வைத்து செய்வதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டன.

கேரளாவில் தயாரிக்கப்பட்டு கழிவுநீர் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பேன்டிகூட் என்று பெயரிடப்பட்ட ரோபோட்கள் கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவில் பயன்படுத்தப்படுகின்றன.

இதனை டெல்லியிலும் பயன்படுத்துவது  குறித்து விவாதிக்கப்பட்டது.

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியை மனிதர்கள் செய்வதை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுப்பதும் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

 

கார்ட்டூன் கேலரி