சிங்கப்பூர்

கொரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க் சிங்கப்பூர் நாட்டு விஞ்ஞானிகள் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்கு ஸ்வாப் டெஸ்ட் எனப்படும் மூக்கு தொண்டையில் உள்ள நீர்ம பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு அதிக அளவில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே சிங்கப்பூர் விஞ்ஞானிகள் இந்த மாதிரிகளைச் சேகரிக்க ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.

இந்த ரோபோக்களுக்கு ஸ்வாப்போட் SWABBOT என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வகை ரோபோக்கள் சுய சிந்தனை செயல்பாடு கொண்டவைகள் ஆகும்.

இதன் மூலம் மாதிரிகள் சேகரிக்கும் ஊழியர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.