காபூல்:

ப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் குண்டு வீச்சுதாக்குதல்நடந்தது. இதில் இந்திய தூதரகத்தின் மிக அருகே உள்ள வேலியில் இந்த குண்டு விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலால் குறித்து இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “ தூதரக கட்டிடத்தில் சேதங்கள் இல்லை. வீசப்பட்டது ராக்கெட் குண்டுதானா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்றார்.

அதே நேரம், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, “இந்தத் , தாக்குதலால் இந்திய ஊழியர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.