காசா: இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய ஜிஹாத் குழுவிற்கும் இடையிலான இரண்டு நாட்கள் கடுமையான சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிலமணி நேரங்களுக்குப் பின்னர், காசா தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் மீண்டும் ராக்கெட்டுகளை வீசினர்.

மூன்று பெண்கள் உட்பட குறைந்தது 34 பாலஸ்தீனியர்களைக் கொன்றதுடன் இஸ்ரேலின் பல பகுதிகளை முடக்கிய இந்தத் தாக்குதல் பல மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களில் மிகப் பெரியதாகும்.
புதிய ராக்கெட் அலைக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, இது போர்நிறுத்தத்தின் தலைவிதியை எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் காசா நடவடிக்கையை ஒரு வெற்றி என்று பாராட்டியது,

இஸ்லாமிய ஜிஹாத் செய்தித் தொடர்பாளர் முசாப் அல்-பெரிம், எகிப்திய தரகு ஒப்பந்தம் அதிகாலை 5:30 மணிக்கு நடைமுறைக்கு வந்தது என்றார். இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் காசா நடவடிக்கை “முடிந்துவிட்டது“, என்று ட்வீட் செய்தார். தெற்கு இஸ்ரேலில் வசிப்பவர்கள் மீது சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன, பாலஸ்தீன கடலோர பிரதேசத்தின் போக்குவரத்து வீதிகளுக்கு திரும்பியது.

ஆனால் பல மணிநேர அமைதிக்குப் பிறகு, ராக்கெட்டுகள் ஒரு பிரதேசத்திலிருந்து வெடித்து, பலவீனமான சண்டையை சோதித்தன. ஈரானிய ஆதரவுடைய போராளிக்குழுவின் மூத்த தளபதியை இஸ்ரேல் கொன்ற பின்னர் 12ம் தேதி அதிகாலை இந்த சண்டை வெடித்தது.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் இந்த கொள்கை “தன்னை நிரூபித்துள்ளது” என்றும் அது தொடரும் என்றும் கூறினார். “ஒரு உயர் இராணுவ அதிகாரியாக இருந்தவர்கள், இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாதம் அல்லது ராக்கெட் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்தவர்கள்” , என்று அனைவரும் அகற்றப்பட்டிருக்கிறார்கள். மேலும அவர் இஸ்ரேலிய இராணுவ வானொலியிடம், “நாங்கள் இதை தொடர விரும்புகிறோம்“, என்று கூறினார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி நப்தாலி பென்னட். காசா போராளிகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என்று எச்சரித்தார். “இஸ்ரேலிய குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பயங்கரவாதியால் சரியாக தூங்க முடியாது, அவரது வீட்டில் அல்ல, படுக்கையில் அல்ல, எந்த மறைவிடத்திலும் அல்ல”. என்று அவர் கூறினார்.