‘ராக்கி’ திரைப்படத்தின் டீஸர் ….!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி கைப்பற்றியது. விக்னேஷ் சிவன் – அருண் மாதேஸ்வரன் இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில் ராக்கி படத்தின் புதிய டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆதி முரண் புதிர் எனும் இந்த டீஸர் தொகுப்பை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்.