விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் வெளியேற்றம்

ண்டனில் இன்ற நடைபெற்ற  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி போட்டியில் மேற்கு இந்திய தீவு வீரர் கெவின் ஆண்டர்சனுடன் மோதிய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரர் தோல்வியுற்றார்.

இந்த தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் உத்வேகத்துடன் ஆடி வந்த நடப்பு சாம்பியன் ரோஜர் ஃபெடரர்  கெவின் ஆட்டர்சனுடன் நடைபெற்ற போட்டியில் தோற்று வேளியேறியது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கெவின் ஆண்டர்சன்

இன்றைய கால் இறுதி போட்டியில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. 5 செட்டுக்கள் நடைபெற்ற போட்டியில்  2-6, 6-7, 7-5, 6-4, 13-11 என்ற செட் கணக்கில் மேற்கு இந்திய தீவு வீரர்  கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக கெவின் ஆண்டர்சன் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.