பெடெரெர் சாம்பியன் !

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆண்கள் பிரிவு ஒற்றையர் போட்டியில் ரோஜர் பெடெரெர் அபார வெற்றி !! ரோஜர் பெடெரெர் ஸ்பெயின் நாட்டின் ரபால் நடாலை 5 செட்டில் , 6-4 ,3-6, 6-1,3-6,6-3 என்ற  ஸ்கோர் கணக்கில்  வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தன்னுடைய 5வது ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் பட்டதையும் , 18வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டதையும் ரோஜர் பெடெரெர் வென்றார். 2012 ஆண்டுக்கு பிறகு இவர் வெற்றி பெற்ற முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

35 வயது நிரம்பிய பெடெரெர் மற்றும் 30 வயது நடால் ஆகிய இருவருக்கும் டென்னிஸ் உலகில் பலத்த போட்டி இருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. 5வது செட்டில் எப்பொழுதும் கோட்டை விடும் பெடெரெர் இன்று தனது அபார ஆட்டத்தின் மூலம் வெற்றிபெற்றதை டென்னிஸ் உலகின் முன்னோடிகள் அவரை பாராட்டி வருகின்றனர் .