ரோஹிங்கியா ஆண்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை?

பலோங்காலி:

ங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஆண்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்ய பங்களாதேஷ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பெரும்பான்மையாக பர்மிய பவுத்த மதத்தினர் வசிக்கிறார்கள். அங்கு சிறுபான்மையினராக இருக்கும்  இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இவர்களை பர்மிய பவுத்தர்கள் மற்றும் அரச படைகள் தொடர்ந்து தாக்கி வருகிறது.

இதையடுத்து இந்திய மற்றும் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளர். பங்களாதேஷில் மட்டும்  10 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களில், 20 ஆயிரம் பெண்கள் கர்ப்பமாக உள்ளனர். 600 பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதுவரை அகதிகளாக வந்தவர்களுக்கே, தங்க இடம் இல்லாத நிலையில், ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் எண்ணிக்கை பெருகுவதை கட்டுப்படுத்த, அந்த இன ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய  பங்களாதேஷ் அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கல் வெளியாகி உள்ளன.

 

இந்த நிலையில், ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் தஞ்சம் புகுந்துள்ள, காக்ஸ்பஸர் மாவட்டத்தில், குடும்பக்கட்டுப்பாடு திட்ட தலைவர், பின்டுகந்தி இது குறித்து தெரிவிக்கையில், “பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா இனத்தவரின் குடும்பங்கள் பெரியதாக இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன், ரோஹிங்கியா ஆண்கள் குடும்பம் நடத்துகின்றனர். பலருக்கு, 15 முதல்  20 குழந்தைகள்வரை உள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம் அளிக்க எங்கள் நாட்டு அரசால் இயலவில்லை. ஆகவே  ஆண்களுக்கு, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அளிக்கும் திட்டம் இருக்கிறது. இதற்கு  ஒப்புதல் அளிக்கும்படி, அரசை வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.

ஆனால் ரோஹிங்கியா இனத்தவருக்கு ஏற்கனெவே கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படுவதாகவும் அவர்கள்  குடும்பக்கட்டுப்பாட்டை விரும்புவதில்லை என்பதால் இது புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.