இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் உலகக்கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில், ரோகித் ஷர்மா ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால், அவர் சில புதிய உலகக்கோப்பை சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, இலங்கை அணிக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.

ரோகித் ஷர்மாவிற்கான வாய்ப்புகள்

* ஒரே உலகக்கோப்பைத் தொடரில் 4 சதங்களை அடித்து சங்ககாராவின் சாதனையை சமன் செய்துள்ளார். இன்றும் ஒரு சதம் அடித்தால், அந்த சாதனையை முறியடிக்கலாம்.

* ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 673 ரன்களை அடித்துள்ளார்.

தற்போதுவரை ரோகித்தின் கணக்கில் 544 ரன்கள் சேர்ந்துள்ளது. எனவே, அடுத்த 2 ஆட்டங்களில் ரோகித் பெரிய இன்னிங்ஸ்களை ஆடினால் அந்த சாதனையையும் முறியடிக்கலாம்.

* மேலும், உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்தவர்களில் சிறப்பான ரன் விகித சராசரியை வைத்திருப்பவர் இலங்கையின் சங்ககாரா. அவரின் சராசரி 108.20%. தற்போது ரோகித்தின் சராசரி 90.66%. எனவே, அடுத்துவரும் 2 போட்டிகளிலும் சிறப்பாக ஆடுவதன் மூலம் சங்ககாராவின் அதிகபட்ச சராசரி சாதனையையும் முறியடிக்கலாம்.

பார்க்கலாம்… இந்த உலகக்கோப்பை தொடர் ரோகித்தின் தொடராக இருக்கிறதா என்று..!