பயிற்சியில் இறங்கினார் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா!

மும்பை: பல்வேறு கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடத் துவங்கியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, கிரிக்கெட் உள்ளிட்ட அன‍ைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டியிருந்தது. இந்நிலையில், இடையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு வந்து பயிற்சியில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உண்டானது.

இந்தவகையில், முதன்முதலில் பயிற்சியைத் துவக்கிய இந்திய வீரர் யாரென்றால், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர்தான். அதன்பிறகு, வேகங்கள் புஜாரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள மைதானங்களில் பயிற்சியைத் துவக்கினர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மென் ரோகித் ஷர்மாவும் மைதானத்தில் இறங்கி, தனது பயிற்சியைத் துவக்கியுள்ளார்.

அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முகத்தில் தண்ணீர் ஊற்றுவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். “நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பூங்காவிற்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.