விராத் கோலி இல்லாத நிலையில், பெரிய இன்னிங்ஸ்களை ஆடி, இந்திய அணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா, எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை.

காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத ரோகித், சிட்னி டெஸ்ட்டில்தான் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 26 ரன்களை மட்டுமே அடித்தவர், இரண்டாவது இன்னிங்ஸில் அடித்தது 52 ரன்கள். ஆனால், அந்த நிலையில் இன்னும் பெரிய ரன்களை அடித்திருக்க வேண்டும்.

பிரிஸ்பேன் டெஸ்ட்டைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவின் 369 ரன்களை எட்டுவதற்கு, ரோகித் ஷர்மா போன்ற ஒரு வீரர் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்க வேண்டும். ஆனால் 44 ரன்களுக்கு சென்றுவிட்டார்.

அடுத்து, அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்தான் மிக மோசம். இந்திய அணியின் வெற்றிக்காக பாடுபட்டிருக்க வேண்டியவர், எனக்கென்னவென்று வெறும் 7 ரன்களில் வெளியேறினார்.

இவர், தொடர்ந்த பல தவறான ஷாட்களை முதிர்ச்சியற்று ஆடியே தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் என்று இவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

எப்படியோ, ரோகித் ஷர்மா போன்ற சீனியர்கள் செய்ய தவறியதை, இந்தியாவின் இளம் படையினர் செய்து சாதித்துவிட்டார்கள்.