இரட்டை சதமடித்து ஓய்ந்த ரோகித் ஷர்மா – இந்தியா 5 விக்கெட்டுக்கு 377 ரன்கள்

ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 377 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ரோகித் ஷர்மா 212 ரன்களை அடித்து அவுட்டானார். இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் ஷர்மா அடிக்கும் மூன்றாவது சதமாகும் இது!

அவருடன் இணைந்த ராஹானே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது ஜடேஜாவும் விருத்திமான் சாஹாவும் ஆடி வருகின்றனர். முதல்நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மைக் காரணமாக ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

முதல்நாள் ஆட்டத்தில் விராத் கோலி, அகர்வால் மற்றும் புஜாரா ஆகியோர் சோபிக்கவில்லை. எனவே, ரோகித்தும் ரஹானேவும் இணைந்துதான் அணியை மீட்டெடுத்தனர்.

தென்னாப்பிரிக்காவின் சார்பில் ராபாடா 3 விக்கெட்டுகளும், ஆனரிச் நார்ட்ஜே மற்றும் ஜார்ஜ் லிண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

கார்ட்டூன் கேலரி