இந்தியா vs வெ.இண்டீஸ் இடையே இன்று நடைபெறும் போட்டியில் சாதனை படைக்க உள்ள ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ்

--

போர்ட் ஆஃப் ஸ்பெயின்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெறு கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றும்.

ஏற்கனவே  இரு அணிகள் இடையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்  முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது.  தற்போதைய நிலையில், இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இன்றைய போட்டி இந்திய வீரர்களின் சாதனைப் பட்டியலில் மேலும் பதக்கங்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய வீரர்கள் கோலி, ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ், புவனேஸ்குமார் போன்றோர்  புதிய சாதனை படைக்க தயாராக உள்ளனர்.

இன்றைய ஒருநாள் போட்டி ஆட்டத்தில், ரோஹித் சர்மா  எடுக்கும் ரன்களின்  மூலம் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதே போல, இந்தப் போட்டியில் சதம் அடித்தால் அதிலும் சில முக்கிய சாதனைகளை செய்வார் ரோஹித் சர்மா.

மேலும், த்துடன் இன்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 27 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் மற்றொரு புதிய சாதனையை படைக்க உள்ளது, அதாவது இவர்கள் இருவரும் ஜோடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடப்பார்கள். இது ஒரு புதிய சாதனையாக அமையும்.

அதுபோல இன்றைய போட்டியில், ரோஹித் சர்மா சதம் அடித்தால், ஒருநாள் போட்டி சதம் எண்ணிகையை 28ஆக உயர்த்துவார். அதன் மூலம் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஹஷிம் ஆம்லாவை முந்தி, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை சனத் ஜெயசூர்யாவுடன் பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இன்றைய போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்தால் இந்தியா சார்பில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதுவரை 53 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள குல்தீப் யாதவ் 96 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக முகமது ஷமி 56 போட்டி களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல   விராத் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன் நிலைப்பாட்டை பதிவு செய்தால்,  அது சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் சாதனையை முறியடித்துவிடும்.

உலகக் கோப்பை வென்ற ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை ஒருநாள் பேட்டிங் பட்டியலில் செல்ல ரோஹித் சர்மாவுக்கு 26 ரன்கள் தேவை. யுவராஜ் 304 ஒருநாள் போட்டிகளில் 8701 ரன்கள் எடுத்திருந்தார். தற்போதைய நிலவரப்படி, ரோஹித் 217 போட்டிகளில் 8676 ரன்கள் எடுத்துள்ளார், யுவராஜ் சிங் 304 போட்டிகளில் 8701 ரன்களுடன் ஓய்வுபெற்று விட்டார்.

ஏற்கனவே  ரோஹித் ஷர்மாவை விட அதிக ரன்கள் எடுத்து  சச்சின் டெண்டுல்கர் (18426), விராட் கோலி (11406), சவுரவ் ரவ் கங்குலி (11363), ராகுல் திராவிட் (10889), எம்.எஸ்.தோனி (10773), முகமது அசாருதீன் (9378), யுவராஜ் சிங் (8701) ஆகியோர் உள்ளனர்.

அதுபோல இன்றைய போட்டியில் புவனேஸ்குமார் விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், கிறிஸ் கெயிலின் சாதனையை முறியறித்து முன்னேறுவார். ஏற்கனவே 15 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில்,  இன்றைய போட்டியில்ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், தற்போது, மெர்வின் தில்லன் மற்றும் கிறிஸ் கெய்லுடன் இரண்டாவது இடத்தில் உள்ளா நிலையில், மேலும் முன்னேறுவார்.