ரோஹித் இன்று யோயோ தேர்வில் பங்கேற்பு: வெற்றி பெற்றால்  கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு

பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இன்று யோயோ தேர்வில் பங்கேற்கிறார். இதில் வெற்றி பெற்றால்  கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரருக்கும் தொடர் விளையாடுவதற்கு முன்பாக அவர்களின் உடற்தகுதியை உறுதிப்படுத்த “யோ-யோ” எனும் தேர்வை  வைக்கிறது.

இந்த உடற்தகுதி சோதனையில் வெற்றிப் பெற்றால் மட்டுமே, ஒரு வீரரால் இந்திய அணிக்காக தொடரில் விளையாட முடியும். ஏற்கெனவே வைக்கப்பட்ட யோ யோ டெஸ்ட்டில் அம்பத்தி ராயுடு, முகமது ஷமி ஆகியோர் தகுதி பெறவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இன்று யோ யோ டெஸ்ட்டில் பங்கேற்க இருக்கிறார்.  இதில் ரசிகர்களால் “ஹிட் மேன்” ; என  அழைக்கப்படும் ரோகித் சர்மா 16.3 மதிப்பெண்கள் எடுத்து பாஸ் ஆவாரா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

யோ யோ தேர்வில் இந்த மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே ரோகித் சர்மாவால் இந்திய அணிக்காக விளையாட இயலும்.

இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை அண்மையில் நடைபெற்றது. இதில், சிறப்பாக ஓடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்ட பலரும் வெற்றி பெற்றனர்

இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி , இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்ளும்  தகுதியை அடைந்தனர்.

ரோரோகித் சர்மா யோ யோ தேர்ச்சி பெறாத பட்சத்தில், அவருக்கு பதிலாக ரஹானே அணிக்கு திரும்ப தயாராக இருக்கிறார்.