ஒரு டெஸ்ட் தொடரின் அதிக சிக்சர்கள் – ரோகித் ஷர்மா புதிய சாதனை..!

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தனது 6வது சதத்தைப் பதிவுசெய்ததோடு, ஒரு டெஸ்ட் தொடரில் மிக அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மென் என்ற சாதனையை செய்துள்ளார் இந்தியாவின் ரோகித் ஷர்மா.

முதஸ் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்தார் ரோகித் ஷர்மா. இந்தத் தொடரில் அவர் மொத்தம் 17 சிக்சர்களை அடித்து, ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

இதன்மூலம், மேற்கிந்திய தீவுகளின் ஹெட்மேர் வைத்திருந்த 15 சிகசர்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, விசாகப்பட்டணத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிக சிக்சர்கள்(13) அடித்து, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் சாதனையை(12) முறியடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது சிக்சர் விஷயத்தில் மீண்டும் ஒரு சாதனையைப் புரிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி