சச்சினின் பிரமாண்ட சாதனையை தகர்த்து புதிய மைல்கல் படைத்த ரோஹித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 152 ரன்கள் அடித்ததன் மூலம் சச்சினின் சாதனையை தகர்த்து புதிய சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

rohit

இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரண்டு டெஸ்ட் தொடரையும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஒருநாள் போட்டி நடந்தது. இதிலும் இந்தியா மிக சிறப்பான விளையாடி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் கோலி 140 ரன்களும், ரோகித் கடைசி வரை விக்கெட் இழக்காமல் 152* ரன்களை குவித்தார். இதனால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலக கிரிக்கெட்டின் ஜாம்பவனாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்ற அளவில் பல சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். அப்படி அவர் ஒருநாள் போட்டியில் 150+ ரன்களை அடிப்பதில் படைத்திருந்த சாதனையை தற்போதைய வீரர் ரோகித் சர்மா தகர்த்துள்ளார்.

அதிக 150+ ரன்கள் அடித்த வீரர்கள் :

ரோகித் சர்மா – 6 முறை
சச்சின் டெண்டுலகர், டேவிட் வார்னர் – 5 முறை
ஜெயசூரியா, கிறிஸ் கெய்ல், ஹசிம் ஆம்லா – 4 முறை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் 3 முறை இரட்டை சதம் அடித்தவர், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்தவர் என்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக ரோகித் சர்மா உள்ளார்.