மும்பை: இந்திய துவக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுத் தொடர்கள் நடைபெற முடியாத சூழல் இருந்தாலும், விருது பரிந்துரை நடைமுறைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய அளவில், விளையாட்டு வீரர்களுக்கு ‘அர்ஜுனா’ மற்றும் ‘கேல் ரத்னா’ போன்ற விருதுகள் முக்கியமானவை. இந்தாண்டு, இந்த விருதுக்கு ரோகித் ஷர்மாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவர், கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில், 5 சதங்கள் அடித்து, அந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மொத்த ரன்கள் 648. மேலும், உலக டி-20 அரங்கில் 4 சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இதற்கு முன்னர், சச்சின்(1997-98), தோனி(2007) மற்றும் கோலி(2018) கேல் ரத்னா விருதைப் பெற்றுள்ளனர்.
மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவானின் பெயர் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.