Random image

”டிம் சதம் அடித்தால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்க முயற்சிப்பேன் “- தன்னை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டனுக்கு ரோஹித் பதிலடி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெயின் சதம் அடித்தால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பரிந்துரைப்பேன் என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். போட்டியின் போது ஸ்டெம்பிற்கு பின்னல் நின்றுக் கொண்டு டிம் பெயின் கிண்டலடித்ததற்கு ரோஹித் சர்மா இந்த பதிலடி கொடுத்துள்ளார்.

rohit

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான ரன்களை குவித்துள்ளது. இந்நிலையில், போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணியின் ரோஹித்த் ஷா்மா பேட்டிங் செய்து கொண்டு இருந்தாா். அப்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ஸ்டெம்புக்கு பின்னால் நின்றுக் கொண்டு ரோஹித்தை தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டு இருந்தாா்.

ஸ்டெம்பிற்கு பின்னால் கிண்டலடித்த டிம், “ ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ரோஹித் ஷா்மா சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுவேன். நான் எல்லா அணிகளிடமும் விளையாடியுள்ளேன். நீங்களும் எல்லா அணிகளுடனும் விளையாடியுள்ளீா்கள் “ என்று தொடர்ந்து டிம் சீண்டிய வண்ணம் இருந்தாா்.

இருப்பினும் போட்டியின் தீவிரத்தை உணர்ந்து ரோஹித் பொறுப்புடன் விளையாடினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “ டிம் பெயின் எனக்கு பின்னால் இருந்து கொண்டு பேசியதை கேட்டேன்.

ஆனால், நான் பேட்டிங்களில் கவனம் செலுத்துவதில் குறியாக இருந்தேன். டிம் பெய்ன் இந்த போட்டியில் சதம் அடித்தால் எனது அணி உரிமையாளரிடம் பேசி அவரை வாங்க முயற்சி செய்வேன். டிம் பெயின் மும்பை அணியின் ரசிகா் போன்று தொிகிறது” என ஆஸ்திரேலிய கேப்டனின் கிண்டலுக்கு ரோஹித் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, டிம் பெயின் இந்திய வீரர் ரிஷப் பண்டையும் கிண்டலடித்து மைதானத்தில் பேசியது வைரலாகி வருகிறது. ”போட்டி முடிந்ததும் எனது வீட்டிற்கு வந்து குழந்தையை பார்த்துக்கோ ”என டிம் கிண்டலாக பேசியது நேரடியாக ஒளிபரப்பாகியது.