Random image

அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது – வாழ்த்துக்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவிற்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. ரோஹித் சர்மாவிற்கு குழந்தை பிறந்த செய்தியை பிசிசிஐ அறிவித்து தனது வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டது.

rohit

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ரித்திகா சஜ்தேவை திருமணம் செய்துக் கொண்டார். அதன்பிறகு ரோஹித் பங்கேற்று விளையாடிய அனைத்து போட்டியையும் பார்க்க ரித்திகா நேரில் வருகை தந்து வந்தார்.

தற்போது, ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ரோஹித் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இன்று ரோஹித் சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரோஹித் சர்மாவிற்கு தெரிவித்து தனது வாழ்த்துக்களையும் பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

உடனடியாக தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க ரோஹித் மும்பை திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது குழந்தையை பார்த்த பின்னர் ஜனவரி 8ம் தேதி ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் ரோஹித்திற்கு பெண் குழந்தை பிறந்தது அவரது நண்பர்கள் மற்றும் குடும்பதாரிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.