விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ரோகித்!!

டி20 போட்டிகளில் அதிக ரன் சோ்த்தவா்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோகித் ஷா்மா முதல் இடத்தைப் பிடித்துள்ளாா்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவா் போட்டியில் 17 ரன்கள் சோ்த்ததைத் தொடா்ந்து டி20 போட்டிகளில் அதிக ரன்களை சோ்த்தவா்கள் பட்டியலில் ரோகித் ஷா்மா முதல் இடம் பிடித்துள்ளாா்.

rohit

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஓவா் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 24 ஆண்டுகளுக்கு பின்னா் இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தோ்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா்களாக கேப்டன் ரோகித் ஷா்மாவும், ஷிகா் தவானும் களம் இறங்கினா். இப்போட்டியில் ரோகித் ஷா்மா 17ரன்கள் எடுத்திருந்த போது டி20 போட்டிகளில் 2103 ரன்களை கடந்தாா். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்தவா்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். மேலும், டி20 போட்டியில் அதிக ரன்களை சோ்த்த இந்தியா் என்ற பெருமையையும் இவர் அடைந்தாா்.

தொடா்ந்து இந்த போட்டியில் சதம் கடந்த ரோஹித் 111 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.