ரோகித் ஷர்மா காயம் குறித்து கவனமுடன் செயல்பட வ‍ேண்டும்: செளரவ் கங்குலி

மும்பை: கிரிக்கெட்டில் நீண்டகாலம் விளையாடுவது முக்கியம் என்பதால், காயம் குறித்து ரோகித் ஷர்மா கவனமுடன் செயல்பட வேண்டுமென்று அறிவுரை வழங்கியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

மேலும், காயம் காரணமாகவே அவரை ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வுசெய்யவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “ரோகித் ஷர்மா இந்திய கிரிக்கெட்டின் சொத்து போன்றவர்.  தற்போது காயத்தில் இருப்பதால், அவரை ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வுசெய்யவில்லை. இல்லையென்றால், இவரைப் போன்ற ஒரு வீரரை விட்டுவிடுவோமா!

அதேசமயம், அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம். இவரை மீண்டும் களத்திற்கு கொண்டுவருவதில் கவனமுடம் செயலாற்றுவோம். இவர் காயத்திலிருந்து மீணடால் அணியில் மீண்டும் சேர்க்கப்படுவார்.

அதேசமயம், பயிற்சியில் பங்கேற்பதற்கும், போட்டியில் ஆடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நெருக்கடியான சூழல்களில் தசைகள் வித்தியாசமாக செயல்படும் என்பதே அதற்கு காரணம்” என்றார் கங்குலி.