பலாத்கார சாமியாருக்கு சிறையில் குவியும் பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள்

ஞ்சகுலா

ரியானாவில் பலாத்கார குற்றத்துக்காக சிறையில் அடைபட்டுள்ள சாமியார் ராம் ரஹீமுக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் வந்து குவிந்துள்ளன.

அரியானாவில் தோரா சச்சா என்னும் அமைப்பை நடத்தி வந்த சாமியார் குர்மித் ராம் ரஹிம் மீது அவர் சிஷ்யைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு 20 வருட சிறை தண்டனை கிடைத்தது.    அவர் தற்போது அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் அடைக்க்கப்பட்டதால் பஞ்சாப் மற்றும் அரியானாவில் மிகப் பெரிய கலவரங்கள் எழுந்தன.    இவருக்கு தண்டனை கிடைத்த போதிலும் இவருடைய சீடர்கள் இன்னும் இவரை மறக்கவில்லை.     இவர் 1967 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்தவர்.   சாமியாருக்கு அவருடைய சீடர்கள் பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

அவர் அடைக்கப்பட்டுள்ள பஞ்சகுலா வின் ரோஹ்தக் சிறையில் கைதிகளுக்கு வரும் அனைத்து கடிதங்களும் சிறைச்சாலை பணியாளர்களால் சோதித்த பிறகே கைதிகளுக்கு வழங்கப்படும்.   தற்போது இவருக்கு குவியும் வாழ்த்து அட்டைகளை மூட்டையாக சேகரித்து ஒவ்வொன்றாக சோதித்து வரும் ஊழியர்கள் நேரமின்மையால் ஓவர்டைம் பணி செய்து வருகின்றனர்.

அத்துடன் மூட்டை மூட்டையாக வரும் அட்டைகள சிறையில் அளிக்க ஆட்டோக்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன.