அமராவதி:

ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படாத நிலையில், அவரை,   ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக நியமித்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது..நடிகை ரோஜாவும் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக  பதவியேற்றார். ஆனால் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

பின்னர் ஒரு வாரம் கழித்து, சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்றியமைக்கபடும் என்ற ஜெகன் மோகன் ரெட்டி,  5 துணை முதலமைச்சர்கள் உள்பட 25 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கிடையில் ஜெகன்மோகனின் அரசியல் பயணத்துக்கு உறுதுணையாக செயலாற்றி வந்த ரோஜாவுக்கு துணைமுதல்வர் பதவி அல்லது அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், அவருக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படாததால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில்,  ஆந்திர அரசின் முக்கிய துறையின் தலைவராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக நியமித்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.