நடிகை ரோஜாவை திருப்பதி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது : தெலுங்கு தேச எம் எல் ஏ

திருப்பதி

டிகையும் ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜாவை திருப்பதி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என தெலுங்கு தேச எம் எல் ஏ அனிதா கூறி உள்ளார்.

பிரபல நடிகையான ரோஜா அரசியலில் இறங்கி தற்போது நகரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் அரசியலில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். அவர் செல்லும் இடமெல்லாம் ஆந்திர பத்திரிகையாளர்கள் அவ்ரை சூழ்ந்துக் கொண்டு அவரது கருத்துக்களை கேட்கின்றனர்.

அனிதா

தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா. இவ்ர் இன்று காலை திருப்பதி கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தர்.

அப்போது அவர். “நடிகை ரோஜாவை திருப்பதி கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. அவருக்கு தடை விதிக்க வேண்டும். திருமலை ஏழுமலையான் கோவில் ஒரு புனிதமான ஆன்மிக தாம். இங்கு அரசியல் பேசுவது மிகவும் தவறான விஷயம்.

ஆனால் இங்கு நடிகை ரோஜா வரும் போதெல்லாம் தரிசனம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்திக்கிறார். அத்துடன் அவர்களிடம் அரசியல் பேசி வருகிறார். இதனால் கோவிலின் புனிதத் தன்மை கெடுகிறது” என்று கூறினார்.