கால்பந்து அரங்கில் 1000 போட்டிகள் – சாதனையை எட்டினார் ரொனால்டோ!

பெராரா: சர்வதேச கால்பந்து அரங்கில், மொத்தம் 1000 கால்பந்து போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இத்தாலி நாட்டின் கிளப் அணிகளுக்கு இடையே ஸீரியா ‘ஏ’ கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் யுவன்டஸ் அணி சார்பில் ரொனால்டோ பங்கேற்றார். அவரின் அணி எஸ்பிஏல் அணியை எதிர்த்து விளையாடியது.

இப்போட்டியின் முடிவில், 2-1 என்ற கோல் கணக்கில் யுவன்டஸ் அணி வெற்றிபெற்றது. ரொனால்டோ தனது அணிக்காக ஒரு கோல் அடித்தார்.

இதன்மூலம், கால்பந்து அரங்கில் மொத்தம் 1000 போட்டிகள் ஆடிய வீரர் என்ற சாதனையை எட்டினார். இவர், இப்போதுவரை போர்ச்சுகல் அணிக்காக 164 போட்டிகளையும், கிளப் அணிகளுக்காக 836 போட்டிகளையும் ஆடியுள்ளார்.