காதலிக்கு விலையுயர்ந்த நிச்சயதார்த்த மோதிரம் – ரொனால்டோவின் மற்றொரு கலக்கல்!

மேட்ரிட்: தனது காதலிக்கு ரூ.5.8 கோடி மதிப்பிலான நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்து ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளார் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இதன்மூலம், அதிக விலையுள்ள நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்த கால்பந்து வீரர்களில் முதலிடம் பெற்றார் இவர். இரண்டாமிடத்தில் உள்ளவர் இங்கிலாந்தின் ஜோர்டன் பிக்போர்டு.

ரொனால்டோவின் காதலியாக தற்போது இணைந்து வாழ்பவர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் உண்டு.

இந்நிலையில், பிரான்ஸ் சென்ற இந்த ஜோடிக்கு, திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போதுதான், இவ்வளவு விலையுள்ள வைர மோதிரத்தை அணிவித்து அசத்தினார் ரொனால்டோ.