யூரோ 2016 போர்ச்சுகல் ஐஸ்லாந்து அயர்லாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி, இத்தாலி அதிர்ச்சி தோல்வி

யூரோ கால்பந்து 2016 போட்டி பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று குரூப் இ பிரிவில்அயர்லாந்து – இத்தாலி , ஸ்வீடன் – பெல்ஜியம் மற்றும் குரூப் எஃப் போர்ச்சுகல் – ஹங்கேரி, ஐஸ்லாந்து – ஆஸ்திரியா   அணிகள்மோதின.

போர்ச்சுகல் – ஹங்கேரி நேற்றைய போட்டிகளில் மிகவும் எதிரிபார்க்கப்பட்ட போட்டி. இந்த போட்டியில், ஹங்கேரி வீரர் ஜீரா19வது நிமிடத்தில் ஒரு எளிதாக முதல் கோல் அடித்தார்.

அதை சமம் செய்யும் வீதமாக போர்ச்சுகல் அணி வீரர் நானி 42வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில்முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடிக்க ஸ்கோர் 3-3 என்ற  என்ற நிலையை பெற்றன.

அதாவது, போர்ச்சுகல் அணி வீரர், ரொனால்டோ 50 மற்றும் 62 வது நிமிடங்களில்  கோல் அடித்தார்.  அதேபோல் ஹங்கேரி வீரர்டஸ்சூட்ஸ்சக் 47 மற்றும் 55வது நிமிடங்களில் கோல் அடித்தார்.

Hungary v Portugal - EURO 2016 - Group F

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயன்று முடியாமல் போனது. இதையடுத்து போட்டி 3-3 என்றஸ்கோர் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த டிரா மூலம் இரு அணிகளும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

இன்னொரு பரபரப்பான ஆட்டம், ஐஸ்லாந்து – ஆஸ்திரியா இடையே நடந்தது.  இந்த  போட்டியில் வெற்றி அல்லது டிராசெய்தல்ஐஸ்லாந்து 2வது சுற்றுக்கு தகுதி பெரும் சூழல் இருந்தது.

போட்டி ஆரம்பத்தில் ஐஸ்லாந்து வீரர் பாத்வார்ஸ்ஸோன் 18வது நிமிடத்தில் கோல் அடிக்க ஐஸ்லாந்து இந்த போட்டில் வெற்றிபெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 60வது நிமிடத்தில் ஆஸ்திரியா ஸ்சோபஃ தனது கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆகும் சூழல் நிலவியது.

AP SOCCER EURO 2016 ICELAND AUSTRIA S SOC WSOC FRA

ஆனால் போட்டி முடியும் தருவாயில் ஐஸ்லாந்து வீரர் ட்ரஸ்ட்ஸன்  கோல் அடித்து ஐஸ்லாந்தை வெற்றி பெற செய்தர் . இந்தவெற்றி மூலம் ஐஸ்லாந்து 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்னொரு போட்டி அயர்லாந்து இத்தாலி இடையே நடந்தது.  முந்தைய இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இத்தாலி இந்தபோட்டிலும் எழுத்தில் வெற்றி பெரும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் போட்டி முடியும் தருவாயில் அயர்லாந்து வீரர் பிராடிகோல் அடித்தார். இதனால்  இத்தாலி அணிக்கும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.   இந்த வெற்றி மூலம் அயர்லாந்து இரண்டாவதுசுற்றுக்கு தகுதி பெற்றது.

3000

இன்னாரு போட்டி  ஸ்வீடன் – பெல்ஜியம் இடையே நடந்தது.  இந்த போட்டியில் பெல்ஜியம் வீரர் நைங்கோலன் 84வதுநிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.  இதையடுத்து ஸ்வீடன் இந்த போட்டில் இருந்துவெளியேறியது.

3832

முதல் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிந்தது. 2வது சுற்றில் பெல்ஜியம் – ஹங்கேரி, இத்தாலி – ஸ்பெய்ன், ஐஸ்லாந்து -இங்கிலாந்து, போர்ச்சுகல் – குரோஷியா, அயர்லாந்து – பிரான்ஸ், ஜெர்மனி – ஸ்லோவாகியா , வட அயர்லாந்து – வேல்ஸ் ,சுவிச்சர்லாந்து – போலந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெரும் அணி கால் இறுதிப் போட்டியில் விளையாடதகுதி பெறும் .