பழநி: 9 மாதங்களுக்குப் பிறகு அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் மீண்டும்  ‘ரோப் கார்’ சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம்  நிறுத்தி வைக்கப்பட்ட பழநி முருகன் கோவில் ரோப் கார் சேவை சுமார் 9 மாதங்களுக்கு பிறகு  இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

காலை ஏழுமலை முதல் ரோப் கார் சேவை தொடங்கியது. இதற்காக முன்பதிவு செய்து காந்திருந்த பக்தர்கள் ரோப் காரில் மலைஉச்சிக்கு சென்று முருகனை தரிசித்து மகிழ்ந்தனர்.

தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி வெப்பநிலை சோதித்தபிறகே ரோப்காரில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் “காலை 7 மணிமுதல் பகல் 1.30 மணிவரையிலும், பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணிவரையிலும் ரோப்கார் இயக்கப்படும்.

கட்டண தரிசனம் அல்லது பொது தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு (http://tnhrce.gov.in) செய்தவர்களுக்கு மட்டுமே ரோப்காரில் செல்ல அனுமதியளிக்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு முதலில் வரும் 1,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.