லாக்டவுனில் நடந்த பாபநாசம் வில்லன் நடிகர் ரோஷன் பஷீரின் திருமணம்….!

கடந்த 2015-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான பாபநாசம் படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் ரோஷன் பஷீருக்கு திருமணம் நடைபெற்றது.

மம்மூட்டியின் உறவினர்., சட்டம் படித்த பர்ஸானாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 5 ஆம் தேதி கேரளாவில் நடந்தது. இதில் இரு வீட்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இவர்கள் திருமணம் எளிமையாக நேற்று நடைபெற்றது.

தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் ரோஷன் பஷீர் இன்று வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.