சந்திரனுக்கு செல்லும்  சுற்று வண்டி : சென்னை மாணவர்கள் தயாரிப்பு

மும்பை

சென்னை மாணவர்கள் கண்டு பிடித்த சுற்று வண்டி (ROVER) வரும் 2019 ஆம் வருடம் சந்திரனுக்கு அனுப்பப்பட உள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் என்னும் அமைப்பு மாணவர்கள் இடையே விண்வெளி அறிவை வளர்த்து வருகிறது.    இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2017 ஆன் வருடம் கலாம் சாட் என்னும் மிகச்சிறிய செயற்கைக் கோளை வடிவமைத்தனர்.   இந்த விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தி அது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

                                                               மாதிரி புகைப்படம்

 

இது அந்த அமைப்பின் மாணவர்களுக்கு மிகவும் ஊக்கத்தை அளித்துள்ளது.   அதனால் மேலும் பல விண்வெளி உபகரணங்களை சிறிய வடிவில் அமைக்க ஆரம்பித்துள்ளனர்.   தற்போது இந்த அமைப்பை சேர்ந்த வினய் பரத்வாஜ் மர்றும் யக்னா சாய் ஆகிய இருவரும் இணைந்து ஒரு புதிய கண்டுப்பை நிகழ்த்தி உள்ளனர்.

சந்திரனை ஆராய ரோவர் என அழைக்கப்படும் ஒரு சுற்று வண்டி அமைக்கப்பட்டு சந்திரனில் இறக்கப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது.   தற்போது விஜய் மற்றும் யக்னா இணைந்து ஒரு சிறிய வடிவிலான சுற்று வண்டியை அமைத்துள்ளனர்.   அளவில் சிறியதாக இருப்பினும் இது முழுத்திறன் உள்ளது என இருவரும் தெரிவிக்கின்றனர்.

இந்த சுற்றுவண்டியை கடந்த சனிக்கிழமை இருவரும் மும்பை ஐஐடி யில் அறிமுகம் செய்தனர்.   இதற்கு பெரிதும் பாராட்டு கிடைத்துள்ளது.   வரும் 2019ஆம் வருடம் இந்த சிறிய சுற்று வண்டி சந்திரனில் இறக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில்  வினய் மற்றும் யக்னா, “அனைத்து மாணவர்களுக்கும் இந்த கண்டுபிடிப்பு மதிப்பெண் மட்டும் முக்கியம் அல்ல என்னும் செய்தியை அளித்துள்ளது.   ஸ்பேஸ் கிட்ஸ் மாணவர்களின் தனித்தன்மையை ஊக்குவிக்கிறது.   மாணவர்கள் எங்களுடன் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் பங்கு பெற வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.